--- --:--:-- --

தமிழகத்தில் கிங்ஸ் மருத்துவமனை கிளைக்கான பணி தொடக்கம்

download (4)

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் லண்டனில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கியிருக்கின்றன. அதன்படி லண்டன் கிங்ஸ் மருத்துவமனை நிர்வாகிகள் தமிழகம் வந்து சேர்ந்திருக்கின்றன. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு பயணத்தின் போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

 

இங்கிலாந்து நாட்டிற்கு சென்றிருந்தபோது லண்டன் கிங்ஸ் மருத்துவமனையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல்கட்ட பணிகளை தமிழக சுகாதாரத்துறை தற்போது மேற்கொண்டு இருக்கிறது.

அதன் அடிப்படையில் கிங்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் எங்கு நிறுவ வேண்டும் அதற்கான இடம் தேர்வு தொடர்பான முதற்கட்ட பணி என்பது சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக லண்டன் கிங்ஸ் மருத்துவமனை நிர்வாகிகள் நேரடியாக தமிழகம் வந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து சென்றிருக்கிறார்கள்.

 

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பொருத்தவரையில் தமிழக முதலமைச்சர் வெளிநாடு சென்றிருந்த போது சுகாதாரத்துறை சார்பில் மொத்தம் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அடிப்படையில் இது மிக முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆக பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon