சென்னை கொளத்தூரில் ஒருவர் ஓடி ஓடி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இதில் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னை கொளத்தூரில் பெயிண்டர் பாஸ்கர் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியது.
பலத்த காயங்களுடன் கோமா நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாஸ்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வீரமணி என்பவர் என் தலையில் கல்லை போட்டு பாஸ்கர் கொல்ல முயன்றதாக தெரிகிறது. அதில் படுகாயமடைந்த வீரமணி சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

அதற்கு பழிவாங்கும் நண்பரை கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. கொலையாளிகளில் ஒருவர் 17 வயது சிறுவன் என்பது அதிர்ச்சி தரும் விஷயமாக இருக்கிறது .அவரை கைது செய்து இருக்கும் காவல்துறையினர் அஜித் என்பவர் உட்பட மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.






