சிபிஐ உயர் அதிகாரிக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக சென்னையை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகரத்தில் செயல்பட்டுவரும் சோமா கட்டுமான நிறுவனத்தின் துணை தலைவர் ராமச்சந்திர ராவ் என்பவர் உள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தில் அதிகாரியாக பணி புரியக்கூடிய நீரஜ் குமார் சிங்கின் உதவியுடன் சிபிஐ டிஐஜி அஸ்ரா கார்கிற்கு இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றார். சிபிஐ டிஐஜி அஸ்ரா கார்க் கொடுத்த புகாரின் அடிப்படையில் தரகர் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் பணிபுரியக்கூடிய அதிகாரியை சிபிஐ கைது செய்தது.
பிறகு அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சோமா கட்டுமான நிறுவனத்தின் துணைத் தலைவரான ராமச்சந்திர ராவ் ஐ சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளது. சிபிஐ வழக்கு ஒன்றை சோமா கட்டுமான நிறுவனத்திற்கு சாதகமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள ராமச்சந்திர ராவ் முயன்றது குறிப்பிடத்தக்கது.