தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களுக்கும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கடலூர், மதுரை, திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியிருக்கிறது. இதனிடையே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. ஆம்பூர் தூத்துக்குடி விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.
மேலும் செய்திகள் :
சிவகங்கையில் 50க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல்..!
மீண்டும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறும் குஷ்பூ..!
இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு சிக்கிய இளைஞர்..!
டியூஷன் சென்டரில் 6 வயது சிறுமியை கடத்திய மர்ம கும்பல்..!
அரசு போட்டி தேர்வு வினாத்தாள் கசிவு.. கண்டுகொள்ளாத பிரதமர் மோடி..!
நான் மன்னிப்பு கேட்கவில்லை மரணித்து விடு என தான் கூறினேன் : மன்சூர் அலிகான்