தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரித்தது குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை

தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் புதிய மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் எல்லைவரை பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. நெல்லை மாவட்டம் இரண்டாகவும், காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதுபோல வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய மாவட்டங்களின் எல்லை குறித்து முதலமைச்சர் ஆலோசித்து உள்ளார்.


Leave a Reply