மூலப்பொருட்கள் மற்றும் இடு பொருட்களுக்கான கண்காட்சி !!!

மூலப்பொருட்கள் மற்றும் இடு பொருட்களுக்கான கண்காட்சி Raw mat India 2019 என்ற தலைப்பில் செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி முதல் கோவை கொடிசியாவில் துவங்க உள்ளது.

 

நாட்டிலேயே மூலப்பொருட்கள் இடுபொருட்கள் மற்றும் சேவைக் கண்காட்சி நடப்பது இதுவே முதன்முறை. இதனடிப்படையில் இக்கண்காட்சியானது கோவை கொடிசியாவில் தொடங்க உள்ளது. இக்கண்காட்சியில் டெல்லி,மேற்கு வங்கம், மகாராஷ்டிரா,கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் இருந்து 82 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

இக் கண்காட்சியானது ஆட்டோமொபைல்ஸ், டெக்ஸ்டைல், கட்டுமானம்,மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், விவசாயம்,ராணுவம், எரிவாயு சம்பந்தப்பட்ட தொழில் களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை கொடிசியாவில் செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி முதல் தொடங்க உள்ள கண்காட்சி இருபதாம் தேதி வரை கொடிசியா கண்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது. பார்வையாளர்கள் இக்கண்காட்சியை தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையிட அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply