10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு நடத்தப்படும்

மொழிகளுக்கான ஒரே தேர்வு நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒரே தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. தற்போது ஆங்கிலம் தமிழ் உள்ளிட்ட மொழி படங்களுக்கு முதல் தாள் இரண்டாம் தாள் என தேர்வு நடத்தப்படுகிறது. பதினொன்றாம் வகுப்பிற்கு பொதுதேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 11, 12 ம் வகுப்புகளுக்கு இரண்டு தாள்களாக தேர்வு நடத்தப்பட்டது.

 

கடந்தாண்டு அது மாற்றப்பட்டு ஒரே தாளாக மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் அப்படி குறைக்க வேண்டும் என்று கோரிக்கை ஒரு சில ஆசிரியர் சங்கங்களால் முன்வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பல்வேறு காரணங்களை முன் வைத்து அதனை 1 தாளாக்கி இந்த கல்வியாண்டு 2019 ஆம் கல்வியாண்டு நடைமுறைப்படுத்துவதாக பள்ளி கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

 

அதற்கு அவர்கள் தெரிவித்திருக்கும் காரணங்கள் என்னவென்றால் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் குறையும் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியில் வெளியிட முடியும். அதுபோல முக்கியமாக, மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கலாம் என்று பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த புதிய நடைமுறையை நடைமுறைப்படுத்துவதாக பள்ளிக்கல்வித்துறை அரசாணையை வெளியிட்டுள்ளது.


Leave a Reply