எல்லையில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த பாகிஸ்தான் வீரர்கள் இருவரின் உடலை அந்நாட்டு ராணுவம் எடுத்து செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. இந்தியா மீது எல்லை தாண்டி தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்தியாவின் எல்லைப் பகுதிக்குள் நுழைய முற்பட்டு இருக்கிறார்கள் .
அப்போது இந்திய ராணுவ தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட அதிரடி தாக்குதலை அடுத்து இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவருடன் வந்தவர்கள் மீண்டும் அவர்களை எல்லை பகுதிக்குள் சென்று விட்டார்கள். இருவரின் உடலை கூட அவர்கள் எடுத்துச் செல்லாமல் மீண்டும் அவர்களின் எல்லைக்குள் சென்று விட்டதாக அங்கிருந்து வரக்கூடிய தகவல் சொல்லப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மிக முக்கியமான பகுதிகளில் தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் படுகாயம் அடைவதும் தொடர்ச்சியான விஷயமாக இருக்கிறது. அங்கிருந்து தாக்குதல் நடத்துவது அவர்களுக்கு சிறப்பான விஷயம் ஏன் என்றால் அவர்கள் இருக்கக்கூடியது சற்று மேடான பகுதியாக இருக்கும். அங்கிருந்த மலைகளின் வழியாக ஊடுருவி இந்தியாவில் தாக்குதல் நடத்துவார்கள்.
குறிப்பாக ரோந்து பணியை செல்ல செல்லும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள். இங்கு நிகழ்ந்த சம்பவம் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடும் போது தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இறந்துபோன 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்களையும் இந்தியாவின் பகுதிகள் வந்து எடுத்துச் செல்வதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது. வெள்ளைக்கொடியுடன் வந்தால் இந்திய ராணுவ வீரர்கள் தாக்க மாட்டார்கள் எனவே அதன் அடிப்படையாக வெள்ளை கொடியை கையில் எடுத்து இந்தியாவின் எல்லைக்குள் வந்த உடல்களை எடுத்து சென்றுள்ளனர்.