சுடுகாடு பகுதியில் தொப்புள்கொடி ஈரம் காயாமல் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

உதகை அருகே சுடுகாட்டு பகுதியில் வீசப்பட்டு கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் முட்புதரில் நேற்று மாலை குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.

 

இந்த சத்தத்தை கேட்டு அவ்வழியே வந்த கீர்த்தி ஆகியோர் புதரின் அருகில் சென்று பார்த்தபோது அங்கு தொப்புள்கொடி ஈரம் காயாமல் ஆண் குழந்தை சுற்றி வைக்கப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து குழந்தையை மீட்டு அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தொடர்பு கொண்டு குழந்தையை ஹெல்ப் லைன் அமைப்பினரிடம் ஒப்படைத்த போலீசார் உதகை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் மையத்திற்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிறந்து ஒரு மணி நேரத்தில் பச்சிளம் குழந்தையை புதரில் வீசி சென்றவர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply