பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு: 15 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு ரயில் டிக்கெட்டுகள் 15 நிமிடங்களில் விற்று தீர்ந்து விட்டன. தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக 2020 ஆம் ஆண்டுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது .

 

ஜனவரி பத்தாம் தேதி பயணத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. சென்னையில் எழும்பூர் ரயில் நிலையங்களில் ஏராளமானோர் காத்திருந்தனர். பெரும்பாலானோர் ஆன்லைனிலும் டிக்கெட் முன்பதிவு செய்தனர் .இதனால் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கன்னியாகுமரி செல்லும் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 4 நிமிடங்களில் காத்திருப்பு பட்டியலில் சென்றன.

 

15 நிமிடங்களில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்யப்பட்டன. இதனால் சென்னையில் அதிகாலையிலிருந்தே காத்திருந்த பயணிகள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். ஜனவரி 11-ம் தேதி காண முன்பதிவு நாளை காலை தொடங்குகிறது.


Leave a Reply