மன்னார் வளைகுடா பகுதியில் பச்சை நிறத்தில் மாறிய கடல்நீர்

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியில் கடல் நீர் பச்சை நிறத்தில் காட்சியளிப்பதால் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கி உள்ளன. பாம்பன் முதல் குண்டு வால்பகுதி வரையிலான கடல் பகுதியில் நேற்று இரவு முதல் துர்நாற்றம் வீசியது.

 

மீனவர்கள் இன்று அதிகாலை கடலுக்கு சென்று பார்த்த போது பல்லாயிரக் கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கி இருந்தனர். இந்த பகுதியில் கடல் பச்சை நிறத்தில் மாறியுள்ளது. மேலும் குண்டு வால் கடல் பகுதியில் பச்சை நிறத்தில் ரசாயனம் மிதப்பது போன்று உள்ளது.

ரசாயனம் அல்லது கழிவுநீர் ஏதேனும் கலந்து இருக்குமோ என்று மீனவர்கள் சந்தேகம் தெரிவிக்கிறார்கள். மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த பிறகே கடலின் நிறம் மாறியதற்கான காரணம் தெரியவரும். மேலும் கடலில் கடுமையான துர்நாற்றம் வீசியதால் மீன்கள் இறந்து கிடப்பதாக மீனவர்கள் கடலுக்கு செல்ல அச்சம் தெரிவிக்கிறார்கள்.


Leave a Reply