ஹைட்ரோ கார்பன் திட்டம் – மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான உரிமத்தை ரத்து செய்ய கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் நெடுவாசல், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க சில கம்பெனிகளுக்கு மத்திய அரசு உரிமம் வழங்கியதாக அந்த வழக்கில் கோரப்பட்டிருந்தது.

 

அது மட்டும் இல்லாமல் அனைத்து வகையான ஹைட்ரோகார்பன்கள் ஒற்றை உரிமம் மூலம் அனுமதி அளித்து இருப்பதாகவும் மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பதாகவும் தொடரப்பட்டிருந்தது. 2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு சட்டத்திற்கு இது எதிராக உள்ளது என மனுவில் கோரப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், 8 வாரத்திற்குள் மத்திய அரசு மற்றும் உரிமம் பெற்ற நிறுவனங்கள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


Leave a Reply