சென்னையில் தனியார் கல்லூரி பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இது தொடர்பான காட்சிகளும் வெளியாகியுள்ளன. சென்னை தாம்பரத்தில் இருக்கக்கூடிய தனியார் கல்லூரி பேருந்தில் தற்போது தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது .
சென்னை பெருங்களத்தூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது நடு சாலையில் பற்றி எறிந்த கல்லூரி பேருந்து தீப்பற்றி அதையடுத்து பேருந்திலிருந்து மாணவிகள் பாத்திரமாக வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரி பேருந்து அந்த தாம்பரம் வழியாக சென்று கொண்டிருந்த பொழுது அந்த பேருந்தின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் பயணம் செய்த ஓட்டுனர் அந்த பேருந்தில் இருந்து கீழே இறங்கி விட்டார். பேருந்தின் முன் பகுதி முழுவதும் எரிந்த பிறகு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்குள் அந்த பேருந்து முழுவதும் தீக்கிரையாக்கப்பட்டது.அந்த சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
பேருந்து முழுவதுமாக எரிந்து உள்ளது இதுமட்டுமல்லாமல் மேலும் தீ விபத்து தொடர்பாக முதற்கட்டமாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றன. தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் 2 தீயணைப்பு வாகனத்துடன் பணிகள் நடைபெற்று வருகின்றன.






