விவசாயிகளுக்கு மாதம் தோறும் 3,000 ரூபாய் – பிரதமர் மோடி அறிவிப்பு

நாட்டை உருவாக்க முக்கிய பங்கு வகிக்கும் விவசாயிகளின் இறுதிகாலத்தில் அரசின் ஓய்வூதிய திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். விவசாயிகளுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

 

18 வயது முதல் 40 வயது வரையிலான விவசாயிகள் சேரும் வகையில் கிசான் மானிய திட்டத்தை தொடக்கி வைத்து அவர் ஏற்கனவே ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேர் இந்த திட்டத்தில் இணைந்து உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தத் திட்டத்தில் இணைய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 10 ஆயிரத்து 777 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி எந்த இடைத்தரகர்களின் இடையூறும் இல்லாமல் நேரடியாக வங்கி கணக்கில் இருந்து பணம் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். விவசாயிகளின் இறுதிகாலத்தில் அரசு உறுதுணையாக இருக்க ஓய்வூதியத்திட்டம் உத்தரவாதம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

 

நாட்டின் வளர்ச்சிக்காக அரசு உறுதியுடன் பணியாற்றி வருவதாகவும் மோடி தெரிவித்தார் நிகழ்ச்சியின்போது ஜார்கண்ட் மாநிலத்தின் புதிதாக அமைய இருக்கும்சட்டப்பேரவை கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.


Leave a Reply