திருமணம் நடைபெறவிருந்த நாளில் மணமகன் திடீர் ஓட்டம்! மணமகள் வீட்டார் புகார்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருமண நாளில் மணமகன் ஓட்டம் பிடித்ததால் பெண் வீட்டாரும் திருமணத்திற்காக வந்த உறவினர்கள் சோகத்துடன் திரும்பி சென்றனர். புலி பட்டியை சேர்ந்த பாண்டியனின் மகளுக்கும் அதே பகுதியை சேர்ந்த மலைச்சாமி மகன் கருப்பசாமிக்கு இன்று திருமணம் நடைபெற இருந்தது.

 

திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்த பெண் வீட்டார் சீர்வரிசை பொருட்களுடன் மணமேடையில் காத்திருந்த நேரம் தயாராக இருந்த வேளையில் தாலிகட்டும் நேரம் வரை மணமகன் கருப்பசாமி வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் வேலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கடைசி நேரத்தில் தலைமறைவான மகனை கண்டுபிடித்து கண்டுபிடிக்க கோரி பெண்வீட்டார் வலியுறுத்தினர். தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் கடைசி நேரத்தில் நின்றதால் பெண் வீட்டாரும் மணமக்களை வாழ்த்த வந்த உறவினர்களும் சோகத்தில் மூழ்கினர்.


Leave a Reply