மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவ கழிவுகளை அகற்றுவதில் ஏற்படும் குளறுபடியால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தேங்கும் மருத்துவ கழிவுகளை அகற்றவும் மறுசுழற்சி செய்யவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மருத்துவமனை வளாகத்திலேயே மருத்துவக் கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு குப்பைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.