பிணவறையில் வேலை பார்ப்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த கொடுமை

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் பிணவறையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் நோயாளிக்கு சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசு மருத்துவமனை உள்ளது. காயம்பட்டு வந்த ஒரு நோயாளிக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளிக்காமல் பிணவறையில் வேலை பார்க்கும் போது ஒருவர் சிகிச்சையளித்து தையல் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது .

 

இது குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பிணவறை ஊழியரை சிகிச்சை அளிக்க வைத்த தலைமை மருத்துவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


Leave a Reply