வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்!

அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்களில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிநாடுகளின் முதலீடுகளை பெற போவதாக கூறி சென்ற முதலமைச்சர் வெறுங்கையுடன் திருப்பி இருப்பதாக விமர்சித்துள்ளார்.

 

திமுக ஆட்சியில் 2006 முதல் 2010 மார்ச் வரை மட்டும் 46 ஆயிரத்து 91 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகள் பெறப்பட்டு 2 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் அதிமுக ஆட்சியில் 2015., 2019 ஆம் ஆண்டுகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை குறித்து அவர் சந்தேகம் எழுப்பி இருக்கிறார்.

இப்போது போட்டிருப்பதாக கூறப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்ன ஆகுமோ எனவும் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். அதிமுக ஆட்சியில் இதுவரை போடப்பட்ட 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் படி பெறப்பட்ட முதலீடுகள் நிறுவனங்கள் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் என்பதையெல்லாம் இரண்டு நாட்களில் வெள்ளை வெள்ளை அறிக்கையாக வெளியிட தயாரா என ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

 

அப்படி உண்மையை வெளியிட்ட ஒருவாரத்தில் முதலமைச்சருக்கு திமுக சார்பில் பாராட்டு விழா நடத்த தயார் என்றும் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.


Leave a Reply