அமுல் நிறுவனம் வெளியிட்ட மோடியிடம் கண்கலங்கிய சிவன் கார்ட்டூன் புகைப்படம்

பிரதமர் மோடி இஸ்ரோ தலைவர் சிவனை கட்டியணைத்து ஆறுதல் கூறிய நிகழ்வை சித்தரிக்கும் விதத்தில் நிறுவனம் கார்ட்டூன் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை பார்வையிட பெங்களூர் இஸ்ரோ மையத்திற்கு பிரதமர் மோடி சென்றிருந்தார்.

அப்போது தரை இறங்குவதில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக உணர்ச்சிவசப்பட்ட இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார். கண்கலங்கிய சிவனை பிரதமர் மோடி கட்டியணைத்து ஆறுதல் கூறினார். இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டும் ஆறுதல் வார்த்தைகளும் குவிந்தன.

இந்நிலையில் அமுல் நிறுவனம் பிரதமர் மோடி சிவனை கட்டியணைத்து ஆறுதல் கூறியதை சித்தரிக்கும் வகையில் சந்திரனையும் நட்சத்திரத்தையும் தொடுவதற்கு ஆசை என்ற வசனங்களுடன் கார்ட்டூன் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறது. அதனுடன் சந்திரயான் கனவு இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாகவும் விரைவில் திட்டம் முழுமை பெறும் எனவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ள.


Leave a Reply