--- --:--:-- --

பூக்குழியில் இறங்கி மொகரம் தினத்தை அனுசரிக்கும் இந்துக்கள்!

Capture

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பூக்குழி இறங்கி இந்துக்கள் மொஹரம் தினத்தை அனுசரித்தனர். அந்த பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வாழ்ந்த முஸ்லிம் மக்களால் கட்டப்பட்ட பாத்திமா பள்ளிவாசல் உள்ளது. தற்போது அங்கு ஒரு முஸ்லிம் கூட இல்லாத நிலையிலும் பாத்திமா பள்ளிவாசலை கிராமத்தில் உள்ள இந்து மக்கள் நன்கு பராமரித்தும் வழிபட்டும் வருகின்றனர்.

 

விதை நெல், அறுவடை செய்த முதல் நெல் விளைந்த காய்கறிகள் என அனைத்தையும் பள்ளிவாசலில் வைத்து வழிபட்ட பின்னரே உபயோகப்படுத்துகின்றனர். உலகில் ஆண்டுதோறும் தினத்தை கிராம மக்கள் அனுசரித்து வருகின்றனர் .பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே காப்புக்கட்டி விரதம் இருக்கின்றனர்.

பள்ளிவாசலுக்கு முன்பாக அகலமான குழிவெட்டி பூக்குழி தயார் செய்து ஆண்கள் நெருப்பில் வரிசையாக இறங்கியும், பெண்கள் முக்காடு போட்டு அமர்ந்து கொண்டு தலையின் மீது நெருப்பை கொட்டச் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon