--- --:--:-- --

ரயில்வே தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த தடையில்லை- ரயில்வே வாரியம்

train-new-5-3

ரயில்வே துறை சார்ந்த தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தடையேதும் இல்லை என்று ரயில்வே வாரியம் விளக்கம் அளித்திருக்கிறது. ரயில்வேயில் நடைபெறும் ஜிடிசிபி தேர்வுகளை ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே வினாத்தாள் இருக்க வேண்டும் என்று உத்தரவு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன.

 

இதனால் அனைத்து ரயில்வே மண்டல பொது மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியத்தில் இருந்து விளக்க கடிதம் ஒன்றில் எழுதப்பட்டிருந்தது. ரயில்வே துறை சார் தேர்வுகளை மாநில அல்லது உள்ளூர் மொழிகளில் எழுத தடை இல்லை என்று அந்த கடிதத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ரயில்வே துறை சார்ந்த தேர்வுகளை நடத்தலாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது. திமுகவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon