பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் சின்ன வெங்காய குளிர்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த தொகுதியின் எம்பியும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்திருக்கிறார். பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட நாட்டார்மங்கலம், செட்டிகுளம், மாவிலங்கை, தொட்டியபட்டி உள்ள பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாரிவேந்தர் வாக்காளர்களுக்கு நன்றி கூறினார்.
அப்போது பேசிய அவர் விவசாயிகளின் நலன் காக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். தொகுதியில் இருக்கும் 100 அரசுப் பள்ளிகளுக்கு தலா ஒரு கணினி வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.






