தலைமை நீதிபதி தஹில் ரமாணிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் இன்று போராட்டம்

கொலிஜியம் மீதான அதிருப்தி காரணமாக ராஜினாமா கடிதம் எழுத சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி நேற்று வழக்குகளை விசாரிக்க வில்லை. அவருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளன. மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான தஹில்ரமணி குடியரசுத் தலைவருக்கு ராஜினாமா கடிதம் அளித்தார்.

 

அவரது ராஜினாமாவை ஏற்காத நிலையில் 5 வழக்குகள் தஹில்ரமணி அமர்வில் பட்டியலிடப்பட்டு இருந்தன. ஆனால் தகில் ரமணி விசாரணை நடத்தவில்லை என சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவித்திருந்தார். இதனால் பட்டியலிடப்பட்டு இருந்த வழக்குகளில் முதன்முறையாக விசாரணைக்கு வந்த 13 வழக்குகள் இரண்டாவது அமர்வு நீதிபதிகளான வினித் கோத்தாரி, சரவணன் அமர்வுக்கு மாற்றப்பட்டது.

 

தலைமை நீதிபதி அமர்வில் இருக்கும் நீதிபதி துரைசாமி மற்றொரு நீதிவிசாரணை அறையில் அமர்ந்து வழக்குகளை விசாரித்தார். இதற்கிடையில் தஹில் ரமாணியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சந்தித்தார். அப்போது பதவி விலகும் முடிவை கைவிட அவர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதனிடையே தலைமை நீதிபதி தஹில் ரமாணி இடமாற்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராஜினாமா முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றும் அப்போது வலியுறுத்தினர். தஹில் ரமாணிக்கு ஆதரவாக பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply