ஓய்வு நேரத்தை பாடல்களைப் பாடி மன அழுத்தத்தை போக்கி கொள்ளும் காவல் உதவி ஆய்வாளர் வீடியோ வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் வெங்கடாசலம் என்பவர் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
ஓய்வு நேரத்தில் தனியே அமர்ந்து கொள்ளும் இவர், பாடல்களைப் பாடி மன அழுத்தத்தை குறைத்துக் கொள்வதாக சக காவலர்கள் கூறுகிறார்கள். அதனை படம்பிடித்து அவர்கள் வாட்ஸ்அப்பில் வெளியிட்டு இருக்கிறார்கள்.