வெளி நாடுகளில் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அதை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அதிமுக நிர்வாகிகள் முதலமைச்சரை வரவேற்றனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தனது 14 நாள் பயணத்தின் வாயிலாக 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டு உள்ளதாக கூறினார். இங்கிலாந்து அமெரிக்கா துபாய் போன்று தமிழகத்தை மேம்படுத்தவும் சுற்றுப் பயணம் மேற்கொண்டதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.
வெளிநாட்டில் சென்று இடங்களிலெல்லாம் தமிழர்கள் தனக்கென்று சிறப்பான வரவேற்பளித்தனர் முதலமைச்சர் தெரிவித்தார். வெளிநாட்டு பயணத்தின் போது கோட்சூட் அணிந்து ஏன் என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்தார்.தமது வெளிநாட்டு பயணம் முழு வெற்றி அடைந்திருப்பதாகவும் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் தொடரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.