காட்பாடி ரயில் நிலையம் அருகே குடிநீர் ரயிலும் பயணிகள் ரயிலும் ஒரே தண்டவாளத்தில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரயில் காட்பாடி ரயில் நிலையம் சென்று கொண்டிருந்த போது அதே தண்டவாளத்தில் எதிர்ப்புறத்தில் மற்றொரு ரயில் நின்று கொண்டிருந்ததால் பயணிகள் அச்சம் அடைந்தார்கள்.
பயணிகள் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. அந்த மார்க்கத்தில் பெங்களூரில் இருந்து வந்த ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தண்ணீர் ரயில் மாற்று தண்டவாளம் மூலமாக அப்புறப்படுத்தப்பட்டது. அடுத்த ஒன்றரை மணி நேர தாமதத்திற்குப் பின் பயணிகள் ரயில் புறப்பட்டது. அதனை எடுத்து ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்த ரயில்களும் இயக்கப்பட்டன.
இது குறித்து விளக்கம் கொடுத்த தெற்கு ரயில்வே சிக்னல் கோளாறு காரணமாக தண்ணீர் ரயில் நிறுத்தப்பட்டிருந்த பாதையில் மின்சார ரயில் வந்ததாகவும் அனுமதிக்கப்பட்ட இடைவெளியில் ரயில் பாதுகாப்பாக நிறுத்த பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே தண்டவாள பணிகள் நடைபெறுவதால் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
மேலும் தண்ணீரில் இரண்டு பக்கமும் எஞ்சின் இருக்கும் என்பதால் சற்று தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலை பார்த்து ஒரே தண்டவாளத்தில் ரயில் வந்து கொண்டிருப்பதாக பயணிகள் தவறாக நினைத்துக் கொண்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.