திருவாடானை மங்கலக்குடி சாலையில் சீமைக் கருவேல மரங்களால் ஆபத்து

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் மங்களக்குடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையானது திருவாடானையிலிருந்து அஞ்சுகோட்டை, வெளியங்குடி, குஞ்சங்குளம், வழியாக மங்களக்குடி செல்கிறது. இந்த சாலையின் இருபுறமும் குறிப்பாக மங்களக்குடி அருகே காட்டுக்கருவேல மரங்கள் வளர்ந்து போக்குவரத்திற்கு கடையூறாக உள்ளது.

 

இரண்டு பேருந்துகளோ அல்லது கனரக வாகனங்களோ எதிர்எதிரே வந்தால் சாலையில் ஓதுங்க முடியாமல் மிகவும் சிரமப்படுவதோடு விபத்து அபாயமும் உள்ளது. இது குறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சீமைக் கருவேர அரங்களை அகற்றி போக்குவரத்தினை சரிசெய்ய சமூக ஆர்வளர்கள் கோரிக்கை வைத்தார்கள்.


Leave a Reply