இரண்டே மாதங்களில் 28 லட்சம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு
சென்னையில் இரண்டே மாதங்களில் தானியங்கி கேமரா மூலம் சுமார் 20 லட்சம் போக்குவரத்து விதி மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரில் கடந்த ஜூலை மாதம் தானியங்கி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 24 மணி நேரமும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டன.
இதில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம் இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 8300 வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு நாளில் 63 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




