--- --:--:-- --

ஜமாத்-உல்-முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர் சென்னையில் கைது!

Capture

பீகார் புத்தகயாவில் தலாய்லாமாவை கொல்ல குண்டு வைக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு புத்தகயாவில் உள்ள புத்த மத வழிபாட்டு தளத்தில் தலாய்லாமாவை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டு இரண்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டன.

 

இச்சம்பவம் தொடர்பாக வங்கதேச ஜமாத் உல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த 7 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. கைது செய்யப்பட்டவர்களில் ஹைதராபாத்திலும் கொல்கத்தாவிலுல் அமைத்து தனித்தனியே விசாரணை செய்யப்பட்டனர். ஹைதராபாத்திலிருந்து விசாரணை செய்யப்பட்ட நபர் அளித்த வாக்குமூலத்தின் பெயரில் சென்னையில் உள்ள நீலாங்கரையில் பதுங்கியிருந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கடந்த 10 மாதங்களாக சென்னை நீலாங்கரையில் பதுங்கியிருந்த அவரை காவல்துறையினர் உதவியுடன் தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். மூன்றாம் ஆண்டு புத்த கயாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவரா ? எனவும் சென்னையிலே வேலை செய்யத் திட்டமிட்டுள்ளாரா? என வெவ்வேறு கோணத்திலும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஹைதராபாத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon