மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மீண்டும் கனமழை கொட்டி தொடங்கியுள்ளது. கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள 120 கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலையில் அமைந்துள்ள கிழக்கு மகாராஷ்டிராவில் ஓடும் கோதாவரியின் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அங்கு மீட்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். ஒரிசாவில் பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. முக்கியமான பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து இருப்பதால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கரில் திடீரென வெள்ளம் ஏற்பட்டதில் 20க்கும் மேற்பட்டோர் சிக்கி தவித்தனர் அவர்களை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தினர்.