இன்று வழக்குகளை விசாரிப்பாரா சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணி?
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பணியிடை மாற்றம் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி வழக்கறிஞர்கள் என்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இதற்கு இடையே தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பி அது இன்னும் ஏற்படாத நிலையில் அவர் இன்று வழக்குகளை விசாரிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த தஹில்ரமணி தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ள வழக்கு பட்டியலை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது. தலைமை நீதிபதி தகில் ரமானியும் நீதிபதி துரைசாமி முதல் அமர்வில் வழக்குகளை விசாரித்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி தன் ராஜினாமா ஏற்கபடவில்லை என்றாலும் ராஜினாமா கடிதம் அனுப்பிய விசாரிப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனிடையே தலைமை நீதிபதி தஹில் ரமாணி பணியிடை மாற்றம் செய்யப்பட்டதே மறுபரிசீலனை செய்ய வேண்டும் ராஜினாமா முடிவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொள்ளக் கூடாது என கோரிக்கை விடுத்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களின் சங்கங்களின் கூட்டு குழு அறிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




