குமரியில் தொடர் மழை காரணமாக குமரி மாவட்டத்திலுள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு.கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பெருஞ்சாணி அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் உயர்ந்தது. பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 17.20 அடியாக உள்ளது. அணைக்கு 1121 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 329 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 62.35 அடியாக உள்ளது.
அணைக்கு 1757 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 12.23 அடியாக உள்ளது. அணைக்கு 93 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.சிற்றாறு அணை நீர்மட்டம் 12 அடியை எட்டியதை அடுத்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.