எடப்பாடி பழனிசாமி 10 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று தொழில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டன. அதில் 2300 கோடி ரூபாய் பெறப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தியா, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். திட்டத்திற்கான கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் கலிபோர்னியா மாகாணம் மற்றும் சான்பிரான்சிஸ்கோ பகுதிகளைச் சேர்ந்த தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டன. அதில் 250 க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வானூர்தி ஆகிய நிறுவனங்களுக்கு உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதாக கூறினார்.

 

இக்கூட்டத்தில் 19 நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டு சுமார் 2300 கோடி ரூபாய் முதலீடு தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

அதைத்தொடர்ந்து தொழில் முனைவோருக்கான உதவிகளை வழங்க டிஜிட்டல் ஆக்சிலேட்டர் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். முன்னதாக நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் 16 நிறுவனங்கள் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply