செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நேரடி நெல் கொள்முதல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

செப்டம்பர் 30-ம் தேதி வரை நேரடி நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. தமிழகத்தில் நேரடி கொள்முதல் செய்வதற்கான காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு வழங்கும் காலம் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

 

இதனை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நேரடி கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் மத்திய அரசுக்கு தமிழக அரசு அரிசி வழங்குவதற்கான கால அவகாசம் அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply