நடிகர் தனுஷின் மாரி என்ற பெயரை வைத்துக்கொண்டு ரசிகர்கள் செய்யும் அட்டகாசம்!
ராசிபுரம் பகுதியில் கல்லூரி மாணவர்கள் கையில் துப்பாக்கி வீச்சருவாள் போக்கிரி போல வலம் வருகிறார்கள். தனுஷின் தீவிர ரசிகர்களான இவர்கள் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இவர்கள் பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள். நடிகர் தனுஷ் ரசிகர்கள் முகநூலில் தங்களின் பெயர்களிலும் முன்னாள் தனுஷின் மாரி என்ற பெயரை சூட்டிக் கொண்டு அட்டகாசத்தில் ஈடுபடுகின்றனர்.
மக்களை அச்சுறுத்தும் வகையில் இவர்கள் செய்யும் நடவடிக்கை காவல்துறையால் கண்டுக்க படாமல் போனது. ராசிபுரம் சுற்றியுள்ள பல பகுதிகளில் வசிக்கும் இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள். ராசிபுரம் பகுதிகளில் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் பல சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

கல்லூரி மாணவர்களாக உள்ளதால் இவர்கள் மீது போலீசார் இதுவரை எந்த வழக்கும் பதியாமல் உள்ளனர். இந்த இளைஞர்கள் கஞ்சா, மது, அருந்திவிட்டு அதிவேகத்தில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக அந்த மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனினும் அவர்கள் மீது புகார் கொடுக்க பயப்படுகின்றனர். இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வது புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த கண்ணகி புதிய பேருந்து நிலைய பகுதியை சேர்ந்தவர் உட்பட மூன்று பேரும் இந்த மாணவர்களை கஞ்சா விற்பனை செய்வதற்கு உபயோகப்படுத்தி கொள்வதாகவும் தெரிகிறது.
தனுஷ் ரசிகர்கள் மாரி படத்தில் தனுஷ் மிரட்டி வசூல் ஈடுபடுவது போல பணத்தை வசூல் செய்வதில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இது இளைஞர்களை தற்போது போலீஸார் கண்டுக்காமல் வளரவிட்டால் சமுதாயத்திற்கு ஆபத்தாக இருக்கும் என எச்சரித்த ராசிபுரம் மக்கள் தொடக்கத்திலேயே காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




