தங்கம் வென்ற தங்கங்களுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு !!!
தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் 18 தங்கம் உட்பட 24 பதக்கங்களைப் பெற்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ள கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பட்டையா மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. அதில் இந்தியா மற்றும் தாய்லாந்து இடையே போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் இந்தியா மற்றும் தாய்லாந்திலிருந்து கலந்து கொண்டனர்.

இதில் இந்தியா சார்பாக ஜே.கே.டி.சி சிாில் கராத்தே டு இந்தியா சார்பில் ஆசிய கராத்தே நடுவர் renshi சிாில் வினோத் தலைமையில் கோவை மாவட்டத்திலிருந்து மொத்தம் 12 மாணவர்கள் கலந்து கொண்டனர்.அவர்கள் கட்டா மற்றும் கும்மிடி பிரிவில் கலந்து கொண்டு மொத்தம் 24 பதக்கங்களை வென்றனர்.

இதில் மொத்தம் 18 தங்கம், 2 வெள்ளியும், 4 வெண்கலமும் பெற்று பெஸ்ட் பெர்பார்மென்ஸ் என்ற பட்டத்தையும் வென்றனர். இந்நிலையில் பதக்கம் பெற்று கோவை திரும்பிய மாணவர்கள் அனைவருக்கும் பூங்கொத்து கொடுத்தும், இனிப்பு வழங்கியும் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்களின் கராத்தே பயிற்சியாளர் சிரில் வினோத் அரசும், ஊடகங்களும் அளித்த உற்சாகத்தின் அடிப்படையில் மாணவர்கள் இந்த வெற்றியை பெற்றுள்ளதாக கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




