ரயில்வே தண்டவாள கொக்கிகள் மர்மமான முறையில் அகற்றம்!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ரயில் தண்டவாளங்களில் பிடிமானம் கொக்கிகளை மர்ம நபர்கள் அகற்றியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை பழைய ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ரயில்வே காவலர் சோதனை செய்தார்.

 

தண்டவாளத்தில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் இரும்பு கம்பிகள் அகற்றப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ரயில்வே போலீசார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த செயலில் யார் ஈடுபட்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply