வாகன எண்களை பதிவுசெய்ய அதிநாவின சிசிடிவி கேமராக்கள் தொடக்கம்!

சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் நுழையும் வாகனங்களின் பதிவு எண்களை துல்லியமாக பதிவு செய்யும் திறன் கொண்ட என்பிஆர் சிசிடிவி கேமராக்கள் இயங்கும் பணியை சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார். சென்னையை அடுத்துள்ள முட்டுக்காடு படகு இல்லம் அருகில் இந்த அதிநவீன சிசிடிவி கேமராவில் செயல்பாடு தொடங்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்திலேயே முதன்முறையாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை படம்பிடிக்கும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் சென்னை அண்ணாநகர் பகுதியில் தொடங்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றங்கள் 50 விழுக்காடு குறைந்துள்ளதாக மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறியுள்ளார். கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் வாகன எண்ணை பதிவு செய்யும் சிசிடிவி கேமராவை தொடங்கி வைத்து பேசிய அவர் இவ்வாறு கூறினார்.


Leave a Reply