டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற இருக்கிறது. பிரதமர் இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட கேபினட் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் அந்த மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள், வேலை வாய்ப்புகள் குறிப்பாக ராணுவம், துணை ராணுவம், கூடுதலான ஆட்கள் சேர்ப்பு போன்றவை விவாதிக்கப்பட உள்ளன.
ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகியவை அதிகாரப்பூர்வமாக யூனியன் பிரதேசங்கள் ஆக செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்படும் இருப்பதாக தெரிகிறது. காப்பீடு உள்ளிட்ட துறைகளில் அந்நிய முதலீடுகளை கூடுதலாக அனுமதிப்பது அந்நிய முதலீட்டுக்கான விதிமுறைகளை சுலபம் ஆக்குவது போன்றவையும் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.