133 ரயில் பயணிகள் கொடுத்த புகாரில் தங்க நகை, செல் ஃபோன் மீட்பு!

ரயில் பயணிகளிடம் இருந்து திருடப்பட்ட 2 கிலோ தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை மீட்ட காவல் துறையினர் அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். சென்னை மற்றும் திருச்சி மாவட்டங்களில் 2018,2019 ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளை சம்பந்தப்பட்ட தங்கநகைகள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை மீட்டுள்ளனர்.

 

இவற்றை திருடியதாக 156 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது.

 

இதில் 27 சவரன் நகைகள், 336 செல்போன்கள், ஒரு லேப்டாப், 2 லட்சத்து 58 ஆயிர ரூபாய் ஆகியவை 233 புகார்தாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கொள்ளையர்களை கைது செய்த தனிப்படையினருக்கு பாராட்டுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


Leave a Reply