--- --:--:-- --

கேரளா மற்றும் கர்நாடகாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை!

download (12)

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் மீண்டும் கேரளா கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும்., இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேற்கு திசை காற்று சாதக போக்கின் காரணமாக அடுத்து வரும் நாட்களில் தென் மாநிலங்களில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon