நாய்களின் உடலில் சிப் செலுத்தும் முறை!
மனிதர்களுக்கு செய்யப்படுவது போல் நாய்களுக்கும் முழு உடல் பரிசோதனை செய்துள்ளது திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி. ஒரு படி மேலே போய் நாட்டில நாய்களைக் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளது. சிப்பிபாறை, கன்னி, ராஜபாளையம் இவையெல்லாம் தமிழர் நில பாரம்பரியமாக கட்டிக்காத்து வரும் நாட்டில் நாய்களின் பெயர்கள்.
அழிவின் விளிம்பில் உள்ள இனங்களை பாதுகாக்க முயற்சிகள் எடுக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நாய்களை தொடர் கண்காணிப்பில் வைத்து அவைகளின் உடல் நலன்களைக் காக்கும் வகையில் நாய்களின் உடலில் சிப் பொருத்தும் முறை தொடங்கப்பட்டுள்ளது. பொருத்துவதன் மூலம் நாய்களின் ரத்த ஓட்டம் ரத்த அழுத்தம் இதய செயல்பாடு ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்கும் முடிவதுடன் உடலில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்கவும் முடியும் என்கின்றனர் செல்லப்பிராணி ஆர்வலர்கள்.

தென் மாவட்டங்களில் தான் நாட்டில நாய்கள் அதிக அளவில் இருக்கின்றன. பெரும்பாலான தென்மாவட்ட கிராமங்களில் இன்றும் இது போல் நாட்டு நாய்கள் தான் வீட்டில் செல்லப்பிராணிகளாக உலா வருகின்றனர். நகரங்களில் வளர்க்கப்படும் விலையுயர்ந்த நாய்களுக்கு ஸ்பா போன்ற பல பாதுகாக்கும் வசதிகளும் உள்ளன. ஆனால் நாட்டின் நாய்களுக்கு என்று அப்படி ஏதும் இல்லை. இப்படி ஒரு சூழ்நிலையில் அறிமுகம் செய்யப்படும் முறை நாட்டின் அழிவை அதிக அளவிற்கு குறைக்க முடியும் என நம்புகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




