நடிகர் சங்கத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி!
பொதுப் பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். சென்னை தி நகரில் உள்ள நடிகர் சங்க கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அது 33 அடி பொது சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க நிலமும் அமைக்கப்பட்டுள்ளது .அதில் புதிய கட்டிடம் கட்ட படுவதாகவும் 26 கோடி செலவு ஒதுக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டது.
அந்த பகுதியில் உள்ள ஸ்ரீரங்கம் மற்றும் அண்ணாமலை ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். 2017 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்குகளை அஸ்திவாரம் போட கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்த உத்தரவை நீக்கப்பட்ட நிலையில் அதை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் அது நிலம் பொழுது பயன்பாட்டிற்கு இருந்ததாக கருதப்படும் ஆவணங்களுடன் தாக்கல் செய்யவேண்டும். என கூறினார். பொதுப் பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




