30 ஆண்டுகளாக 3 அரசு பணியில் பணியாற்றி வந்தவர் தலைமறைவு!

அரசாங்கப் பணி என்பது இன்று அனைவரின் கனவு. மத்திய மாநில அரசுகள் அறிவிக்கும் சொற்ப இடங்களுக்குக் கூட பட்டதாரியான பல இளைஞர்கள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இதற்காக பல வருடங்களாக தங்களை தகுதி படுத்துவதற்கும் அவர்கள் தவறுவதில்லை.

 

இப்படி அரசாங்க பணிக்காக முட்டி மோதிக் கொள்ள வேண்டிய இன்றைய காலகட்டத்தில் இங்கு ஒருவர் ஒரு அரசு வேலை அல்ல மூன்று அரசு வேலைகளில் கடந்த 30 ஆண்டுகளாக சர்வசாதாரணமாக பணியாற்றி வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் மாநிலத்தை சேர்ந்தவர் சுரேஷ் ராம்.

 

இவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரே பெயர் ஒரே விலாசத்தோடா பீகார் மாநில அரசின் பொதுப்பணித் துறையில் உதவிப் பொறியாளர், மாவட்டத்தில் நீர் மேலாண்மை துறையில் அரசு அதிகாரி., பீம் நகர் பகுதியில் நீர் மேலாண்மை துறையில் அரசு அதிகாரியான மூன்று வேளைகளில் எவ்வித பயமும் இன்றி கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.

 

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அவருக்கு சம்பள உயர்வும் கிடைத்துள்ளது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சகம் சார்பில் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை அமைப்பு சமீபத்தில் சோதனை ஒன்றை நடத்தியது. அதில் அரசு துறைகளில் ஒரே அடையாளத்துடன் பணியாற்றுகிறாரா? என்று அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

 

அந்த சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சுரேஷ் ராமின் தனிநபர் மற்றும் பணி தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு விட்டனர். ஆனால் சுரேஷ் ராமு ஆதார் கார்டு பான் கார்டு உள்ளிட்ட அடையாளங்களை மட்டுமே சமர்ப்பித்திருந்தார்.

 

இதனால் அதிருப்தி அடைந்த அதிகாரிகள் பணி தொடர்பான விவரங்களையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டனர். இந்நிலையில் சுரேஷ் தலைமறைவானார். இதுதொடர்பாக துணை செயலாளர் சந்திரசேகர் மற்றும் சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


Leave a Reply