தஞ்சையில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகளை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்!

தஞ்சை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள 20 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் ஆய்வக கட்டடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தஞ்சையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 3 கோடியே 35 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

 

இதேபோல், கோவை, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 52 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.


Leave a Reply