திருச்சியில் 20 நாட்களுக்கு முன் காணாமல் போன நடிகர் அஜித்தின் ரசிகர் அவரது நண்பர்கள் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. செங்குளம் காலனியை சேர்ந்த தமிழழகன் என்பவர் கடந்த 7ஆம் தேதி அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை சேர்ந்து காண்பதற்காக வீட்டிலிருந்து ஆயிரத்தில் ஒரு ரூபாய் வாங்கி சென்றுள்ளார்.
அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் தமிழழகன் அவரது நண்பர்களான காக்கா கார்த்தி, ஆட்டோ ஜெகன், மணி ஆகியோர் தன்னை அரிவாளால் வெட்டி விட்டதாக பிரபாகரன் என்பவர் கடந்த 7ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் பிடித்து விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
அதில் பிரபாகரனை சரியாக வெட்டவில்லை என தமிழழகனை தனது நண்பர்கள் கேலி செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தமிழழகன் நண்பர்களை தாக்கியுள்ளார். இதன் காரணமாக மணிகண்டன் ஆகியோர் மதுபோதையில் தமிழனை அடித்துக் கொன்றுள்ளனர் .அவரது உடலை கணேசபுரத்தில் உள்ள மயானத்திற்கு எடுத்துச் சென்று தடயமே தெரியாத வகையில் எரித்து சாம்பலாக்கி உள்ளனர்.
கார்த்தியை கைது செய்த காவல்துறையினர் தமிழழகன் எரிக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை ஆய்வு செய்தனர். அங்கு எதுவும் கிடைக்காததால் காவல்துறையினர் குழப்பமடைந்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஆட்டோ காவல்துறையினர் தேடி வருகின்றனர்.