புதுச்சேரி அரசு சிறப்பாக செயல்பட்டதற்கு கிரண்பேடி பாராட்டு!

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்றிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக தெரிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரையுடன் தொடங்கியது.

 

தனது உரையில் புதுச்சேரி மாநிலத்தில் நிதிப்பற்றாக்குறை இருந்தபோதிலும் மக்கள் நலத்திட்டங்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் செயல்பட்டு வந்ததாக தெரிவித்தார். கடந்த ஆண்டில் 49 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில் பால் பொருட்களின் உற்பத்தி ஆலையை நவீனமயமாக்க 34 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அவர் வரவேற்பு தெரிவித்தார்.

 

மத்திய அரசு ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை உட்பட வணிகவரித் துறை மூலம் 2,131 கொடி கிடைத்துள்ளதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். அதேபோல் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாநிலமாக புதுச்சேரி அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது எனவும் குறிப்பிட்டார்.

 

வேளாண்மையை பாதுகாக்கும் வகையில் காவிரி ஆணையம் சம்பந்தப்பட்ட அலுவல்கள் அனைத்தையும் புதுச்சேரி அரசு தொடர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.ஆளுநர் உரை முடிவு பெற்றதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நாளை நடைபெறுவதாக தெரிவித்தார்.


Leave a Reply