சந்திராயன் 2 அனுப்பியுள்ள நிலவின் புதிய புகைப்படம்!

சந்திராயன்-2 விண்கலம் எடுத்த நிலவின் புதிய புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன் விண்கலம் ஆகஸ்ட் 14ம் தேதி முதல் புவி வட்டப்பாதையில் இருந்து நிலவை நோக்கி நகரத் தொடங்கியது.

 

ஏற்கனவே நிலவின் புகைப்படத்தை சந்திராயன் 2 விண்கலம் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. நிலவிலிருந்து 4 ஆயிரத்து 375 கிலோமீட்டர் தொலைவில் சந்திராயன் 2 விண்கலம் சுற்றி வந்த பொழுது, புதிய புகைப்படத்தை எடுத்து அதில் நிலவின் வடக்கு பக்கத்தில் எழுதி 71.3 கிலோ மீட்டர் விட்டமுள்ள ஜாக்சன் பள்ளத்தாக்கை விண்கலம் படம்பிடித்துள்ளது. இதுபோன்ற நிலவின் பள்ளங்களை புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.


Leave a Reply