கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டு ஐந்து நாடுகளுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியிருக்கிறது. வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரத்தை சிபிஐ கைது செய்திருக்கிறது.
அவரது மகன் கார்த்தி சிதம்பரம் இதே வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார். இந்த நிலையில் வெளிநாடுகளில் கார்த்தி சிதம்பரம் நடத்தி வரும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வங்கி கணக்கு விவரங்களை பெற சிபிஐ முயற்சித்து வருகிறது. அதற்காக சிங்கப்பூர், மொரீசியஸ், லண்டன், சுவிட்சர்லாந்து, பெர்முடா அதிகாரிகளுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது.
அந்த விவரங்கள் கிடைத்தால் முக்கிய ஆதாரமாக திகழும் என்று சிபிஐ கருதுகிறது. சிபிஐ காவலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ப சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது..சிபிஐ காவலில் விசாரிக்க உயர் நீதிமன்றம் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று ப சிதம்பரம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யாமல் கீழ்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் நேற்று மாலை அனுமதி வழங்கியது.சிதம்பரத்தை விசாரிக்க சிபிஐக்கு வழங்கப்பட்ட அனுமதி வரும் 26-ஆம் தேதி நிறைவடைகிறது.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் தொடர்ந்த முன்ஜாமீன் மீது வரும் செப்டம்பர் மூன்றாம் தேதி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. இந்திய நிறுவனமான ஏர்செல் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ததில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக சிபிஐ அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.