அருண் ஜெட்லி மறைவிற்கு பாஜக சார்பில் சென்னையில் இரங்கல் கூட்டம்!

மறைந்த மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி குறித்து சென்னை பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. தமிழ்நாடு சென்னை பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியினுடைய தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் இன்று இரங்கல் கூட்டம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதில் மத்திய இணை அமைச்சர் அஸ்வின் குமார் பங்கேற்றுள்ளார்.

 

அதுமட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஒன்றிணைந்து இந்த அஞ்சலி கூட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இரண்டு நிமிடம் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவருடைய நினைவுகளை கூறும் வகையில் அவரை பற்றி முக்கிய நிர்வாகிகள், அமைச்சர் நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக அருண்ஜெட்லி அவர்கள் நாட்டுக்காக பணியாற்றி இருப்பதாக பல்வேறு உதாரணங்களை சுட்டிக்காட்டி அவருடைய நினைவுகளை கூறி வருகின்றனர்.இந்த நிகழ்வில் கட்சியினுடைய தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அருண் ஜெட்லி அவர்கள் கட்சியை சார்ந்து மட்டுமில்லாமல் அரசியலிலும் அரசு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.

 

பல்வேறு பிரச்சினைகளையும் முன்நின்று செயல்படுத்திக் காட்டியவர். குறிப்பாக கட்சிக்கு சிறுவயதில் இருந்து அரும்பணி ஆற்றியவர். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டருக்கு உதாரணமாக செயல்பட்டவர் அவருடைய அரசியல் பயணமாக இருந்தாலும், கட்சி பணியாக இருந்தாலும், முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு செய்து காட்டக் கூடியவர். சேவைகளை செய்து மக்கள் மத்தியில் பெரிய இடத்தை பிடித்தவர்.


Leave a Reply